'என்னோட பர்சனல் லைஃப் பத்தி என்ன தெரியணும்'... 'திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை'... நெத்தியடி பதிலை கொடுத்த எம்பி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி நுஸ்ரத் ஜஹான் காட்டமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலம் பசீர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் நுஸ்ரத் ஜஹான். இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதுடன் துருக்கி நாட்டின் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் தற்போது நுஸ்ரத் ஜஹான் தனது கணவரைப் பிரிந்து விட்டதாகச் சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக இருப்பது, நுஸ்ரத் ஜஹான் தனது கணவரை சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பது தான். இதனிடையே நுஸ்ரத் ஜஹான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அது குறித்து விளக்கமளித்துள்ளார் நுஸ்ரத் ஜஹான் "இந்திய நாட்டின் சட்டப்படி எங்களுக்கு நடைபெற்றது திருமணமே இல்லை. அதனால் விவாகரத்துக்கான தேவையே எழவில்லை. எங்களுடைய பிரிவு வெகுநாட்களுக்கு முன்பே நடந்துவிட்டது.
இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் நான் அது குறித்து பெரிதாகப் பேசவில்லை. அது தேவையில்லை என நினைக்கிறேன்" என்றார். மேலும் "என்னுடைய சொத்து மற்றும் நகை விவகாரம் தொடர்பாக யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக் கொள்கிறேன். அதை சட்டப்பூர்வமாக அணுகுவேன். இனியும் என்னுடைய சொந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்பது சரியல்ல" எனத் தெரிவித்துள்ளார் நுஸ்ரத் ஜஹான்.