"என்னது சிவாஜி செத்துட்டாரா?" மொமண்ட்... போபால் விஷவாயு மேல்முறையீடு வழக்கு விசாரணை... டேய்... 36 வருஷம் ஆச்சுடா....

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 28, 2020 07:50 AM

போபால் விஷவாயு கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்காக இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

The Bhopal gas leak case seeks compensation- case hearing today

மத்திய பிரதேசத்தின் போபாலில், அமெரிக்காவை சேர்ந்த 'யூனியன் கார்பைட்' நிறுவன தொழிற்சலையில், 1984ல் ஏற்பட்ட விஷவாயு கசிவால், 3,000 பேர் பலியாகினர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, 715 கோடி ரூபாய் இழப்பீட்டை, யூனியன் கார்பைட் நிறுவனம் வழங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக, பல்வேறு உடல் உபாதைகளால் போராடி வருவதால், அவர்களது மருத்துவ செலவுக்கு, கூடுதலாக 7,844 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, அமெரிக்க நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், இன்று(ஜன.,28) விசாரணைக்கு வருகிறது.

Tags : #BHOBAL #GAS LEAK CASE #COMPENSATION #HEARING TODAY