'இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா'?... 'ஒரு கிலோ ஸ்வீட்யின் விலை 9 ஆயிரம்'... இனிப்பு கடையின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு கிலோ இனிப்பின் விலை, 9 ஆயிரம் ரூபாய், கேட்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா. ஆனால் அது தான் உண்மை.
குஜராத்தில் பிரபலமான கொண்டாடப்படும் விழா சாந்தி பாட்வோ. இந்த விழாவில் பிரத்தியேகமாகக் காரி என்ற இனிப்பை எடுத்துக்கொள்வர். இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை முன்னிட்டு சூரத்தில் உள்ள ஷரத் பூர்ணிமா என்ற இனிப்புக்கடை ‘கோல்டு காரி’ காரி இனிப்பை விற்பனைக்கு வைத்துள்ளது. ஆனால் இதன் விலை தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண காரி இனிப்பு ஒரு கிலோ ரூ.660-ரூ.820 வரை கிடைக்கும். ஆனால் இந்த காரி இனிப்பின் விலை ரூ.9000. அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்றால் அதில் தங்கம் பூசப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கடையின் உரிமையாளர் ரோஹன், கூறுகையில் ‘’இந்த ஆண்டு நாங்கள் கோல்டு காரியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இது மிகவும் ஆரோக்கியமானது.
ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமான பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று தங்கம். இந்த இனிப்பை அறிமுகப்படுத்தி மூன்று நாட்கள் ஆகிறது. ஆனால் எதிர்பார்த்ததைவிடச் சற்றுக் குறைவாகத்தான் விற்பனையாகிறது. வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.