'அந்த பிஞ்சு முகத்தைக் கூட இன்னும் பார்க்கல, அதுக்குள்ள...' 'குழந்தை பிறந்து சில மணி நேரங்களிலேயே...' தந்தை செய்த அதிர்ச்சிக் காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிரிபுராவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவருடைய குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தா பைத்யா. இவர் அப்பகுதியில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை முதலில் அவரது தாயும், தம்பியும் பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
உறவினர்களுடன் விசாரிக்கையில் மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியானது. பைத்யா தூக்கிய தொங்கி தற்கொலை செய்துக் கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பச்சிளங் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் பைத்யா தற்கொலை செய்து கொண்டது அனைவைரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் கடந்த சில தினங்களாகவே குடும்ப பிரச்சினை மற்றும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னும் சரியான காரணம் தெரியாததால் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
