90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் காலமானார்!!..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Nov 22, 2022 12:10 AM

'90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஷயத்தில் ஒன்றாக இருந்த ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா (Areez Pirojshaw Khambatta) தனது 85 வயதில் காலமானார்.

Rasna founder areez pirojshaw passed away at the age of 85

நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஆரீஜ் பிரோஜ்ஷா, இதற்காக சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

அப்படி இருக்கையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, தனது 85 ஆவது வயதில் மரணம் அடைந்தார் ஆரீஜ் பிரோஜ்ஷா.

பிரோஜ்ஷாவுக்கு பெர்சிஸ் என்ற மனைவியும், பிருஜ், டெல்னா மற்றும் ருஜான் ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர். மருமகள் மற்றும் பேரன் பேத்திகளும் உள்ள நிலையில், 90 ஸ் கிட்ஸ் பலரின் பேவரைட் ஆகவும் ரஸ்னா குளிர்பானம் இருந்து வருகிறது. அவர்களின் சிறு வயது காலத்தில் ஏராளமான பொருட்கள் மற்றும் விஷயங்கள் அவர்களின் வாழ்வை சிறந்த தருணமாக மாற்றி இருக்கும். அதில் முக்கிய பங்கு ரஸ்னாவுக்கும் உள்ளது.

Rasna founder areej pirozsha passed away at the age of 85

ஆரீஜ் பிரோஜ்ஷாவின் ரஸ்னா குளிர்பானம், 60 நாடுகளில் கிளை பரப்பி உள்ளது. கடந்த 1970 களில், மிக குறைந்த விலைக்கு ஒரு குளிர்பானமாக ரஸ்னாவை ஆரீஜ் பிரோஜ்ஷா அறிமுகப்படுத்தி இருந்தார். அடுத்தடுத்து ஆண்டுகளில், மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் அடைந்த ரஸ்னா குளிர்பானம், அதன் சுவை மற்றும் தரம் உள்ளிட்டவற்றிற்காக சில விருதுகளையும் கூட வாங்கி இருந்தது.

அதே போல, பிரோஜ்ஷாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அறக்கட்டளை நிறுவனம் சார்பில் கல்வி மற்றும் உதவி தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்ட பணிகளையும் நடத்தி வருவதாக தெரிகிறது.

Tags : #RASNA #AREEZ PIROJSHAW

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rasna founder areez pirojshaw passed away at the age of 85 | India News.