'பசியோடு இருக்குறவங்கள தேடிப்போய்...' 'சாம்பார் சாதம், புளியோதரை மட்டுமில்ல, வடை இனிப்பும் உண்டு...' போலீசாரின் மகத்துவமான சேவை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 26, 2020 07:40 PM

இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் சாலையில் தங்கியிருக்கும் மக்களுக்கு உகாதி அன்று அன்னதானம் வழங்கிய போலீசாரை சமூகவலைத்தளதில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Policemen celebrating Ugadi with food for the hungry people

கொரோனா வைரஸை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் 24.03.2020 முதல் 144 ஊரடங்கு தடை சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து 144 தடை உத்தரவால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இம்முறை உகாதி பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை.

ஆனால் சித்தூரை சேர்ந்த போலீசார் உகாதி பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளனர்.  சித்தூர் காவல்துறைக் கண்காணிப்பாளறான செந்தில்குமார் சாலை ஓரங்களில் இருக்கும் 500 மக்களுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல தன்னார்வல அமைப்புகள், நல உதவி செய்யும் அமைப்புகள் என அனைத்து தரப்பினரையும் உதவிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

காவல் துறையோடு, சித்தூரில் அம்மவோடி ஆசிரமம் மற்றும் இன்னும் சில இளைஞர்கள் சேர்ந்து இதற்கான பணிகளை துவங்கியுள்ளனர்.  சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் செய்து கிட்டத்தட்ட ஐநூறு நபர்களுக்கு உணவு அளித்துள்ளனர். மேலும் உகாதி பண்டிகை கொண்டாடும் வகையில் உணவோடு வடையும் இனிப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் கடந்த சில நாட்களாகவே பசியிலிருந்த பலரும் இதன் மூலம் பசியாறினர். காவல்துறையின் சேவையைப் பாராட்டினர். புத்தூரிலும் துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் முன்னூறு பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் நகரி, கர்வேடி நகரம், நிந்த்ரா மற்றும் சத்யவேடு பகுதிகளிலும் பலருக்கு உணவளிக்கப்பட்டது. ஊரடங்கு தொடர்வதால் இந்தச் சேவையை காவல்துறை தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : #UGATHI