PARK HYO-JEONG : நேரலையில் வைரலான தென் கொரிய யூடியூப் பெண் .. தன்னை காப்பாற்ற ஓடி வந்தவர்களுடன் உணவருந்திய நெகிழ்ச்சி ஃபோட்டோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரியவை சேர்ந்த பெண் ஒருவர் youtube நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடன் வந்து சில்மிஷம் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Mumbai :மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்தபடி youtube நேரலையில் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செய்த காரியம் கூடியிருந்த அனைவரையும் பதைபதைக்க செய்தது. வந்தவர்கள் அந்த இளம் பெண்ணை கடந்து செல்லும் பொழுது அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தும் வண்டியில் அமரச் சொல்லி வற்புறுத்தவும் செய்தனர்.
அவர்களுள் ஒரு இளைஞர் இறங்கி வந்து அந்த பெண்ணை முத்தமிடவும் முயற்சி செய்திருக்கிறார். அதன் பிறகு அந்த பெண், அவர்களின் கையை உதறிவிட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஊடகங்களில் பரவியதை அடுத்து குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்களையும் கைது செய்திருக்கின்றனர்.
இது தொடர்பில் இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் அந்த பெண்ணின் கையை பிடித்து வம்பு இழுக்கக்கூடிய இளைஞர்களின் செயல்கள் அடங்கிய பரபரப்பு காட்சிகள் இடம்பெற்றத்தை, அந்த இளைஞர்களின் செயல்கள் விமர்சிக்கப்பட்டு வந்தன, இதனிடையே குறிப்பிட்ட அந்த வீடியோவில் அந்த இளம் பெண்ணை அந்த இளைஞர்கள் வம்பிழுத்தபோது இரண்டு இளைஞர்கள் உதவி ஓடிவந்து அந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயற்சிப்பதும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் தன்னை காப்பாற்ற ஓடிவந்ததுடன், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்த 2 இளைஞர்களுக்கு நன்றி சொல்லி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுடன் அந்த கொரிய யூடியூபர் இளம் பெண்ணான Park Hyo-Jeong மும்பையில் உணவருந்தக்கூடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.