'கொரோனா அச்சம்'... 'வித்தியாசமான மாஸ்க்குடன் நாடாளுமன்றம் வந்த எம்பி'... அந்த மாஸ்க்கில் இருக்கும் சிறப்பம்சங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 09, 2021 01:26 PM

மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்தார்.

MP Narendra Jadhav wears High-Efficiency Particulate Air filter mask

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனிடையே நாடாளுமன்ற 2-ம் கட்ட அமர்வு நேற்று  தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத்திற்கு வந்த எம்.பி.க்கள் அனைவரும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். அதேநேரத்தில் மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் அணிந்து வந்திருந்த முகக்கவசம் பலரது கவனத்தையும் பெற்றது.

MP Narendra Jadhav wears High-Efficiency Particulate Air filter mask

இதுகுறித்து பேசிய எம்.பி. நரேந்திர ஜாதவ், இந்த உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் 99.7 சதவீத அளவிற்கு கொரோனா கிருமிகள் பரவுதை தடுக்கும் திறன் கொண்டது எனவும், எந்த கிருமிகளும் வாய் மற்றும் மூக்கு வழியாக நமது உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் திறன் கொண்ட நவீன முகக்கவசம் இது என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MP Narendra Jadhav wears High-Efficiency Particulate Air filter mask | India News.