எத்தன "வைரஸ்" வந்தாலும் சரி ... "தாய்" பாசம் எப்போவும் வேற லெவல் தான் ... மாட்டிக்கொண்ட மகனுக்காக 'கெத்தான' காரியம் செய்த தாய்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 10, 2020 09:45 AM

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், வெளிமாநிலங்களில் தொழில் செய்து வந்த பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர், பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. அதே போல வெளிமாநிலங்களில் படிக்க சென்றவர்களும் செய்வதறியாது சிக்கி தவித்து வருகின்றனர்.

Mother did an amazing thing to save his son amid Lockdown

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் ரசியா பேகம் என்ற ஆசிரியை, நெல்லூரில் சிக்கி தவித்த தனது மகன் நிஜாமுதீனை  அழைத்து வர சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெல்லூருக்கு ஸ்கூட்டியிலேயே சென்று அழைத்து வந்துள்ளார். கடந்த மாதம் மருத்துவ பயிற்சிக்காக நிஜாமுதீன், நிஜாமாபாத் சென்றிருந்த நிலையில் ஊரடங்கின் காரணமாக அங்கு சிக்கி தவித்துள்ளார். தனது மகனை சொந்த ஊர் அழைத்து வரவேண்டி தனது நிலையை விளக்கி காவல்துறையின் அனுமதி கடிதத்தைப் பெற்ற ஆசிரியை ரசியா, மகன் நிஜாமுதீனை 1,400 கிலோமீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து அழைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை ரசியா பேகம் கூறுகையில், 'ஒரு ஸ்கூட்டியில் இத்தனை தூரம் பயணிப்பது என்பது கடினமான காரியம். ஆனால் மகனை அழைத்து வர வேண்டும் என்பதால் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. இரவு நேரங்களில் பயணம் செய்த போது கொஞ்சம் பயம் இருந்தது. ஒரு வழியாக மூன்று நாட்களில் என் மகனை அழைத்து சொந்த ஊருக்கு வந்தடைந்து விட்டேன்' என்றார்.