என்னங்க சொல்றீங்க? ரூபாய் நோட்டு பேப்பர்-ல தயாரிக்கலயா?.. இவ்வளவு நாளா இதுதெரியாம போச்சே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் பலரும் நினைப்பது போல பேப்பரில் தயாரிக்கப்படுவதில்லை.
Also Read | "கொரோனா மாதிரியே இன்னொரு நோய் பரவுது".. வட கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத நோய்.. பரபரப்பில் உலகம்..!
இந்தியாவில் 5 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்படுகின்றன. நம்மில் பலரும் இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் பேப்பரில் அச்சடிக்கப்படுவதாக நினைத்திருப்போம். ஆனால், அது உண்மையல்ல. இந்திய கரன்சி நோட்டுகள் முழுவதும் பருத்தி பஞ்சால் (Cotton) உருவாக்கப்படுகின்றன.
எளிதில் அச்சடிக்க முடிவதாலும், நீடித்த காலத்திற்கு பயன்படுத்தலாம் என்பதாலும் காட்டனை ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திவருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கரன்சி நோட்டுகளை உருவாக்க பருத்தி பயன்படுத்தப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய ரூபாய் நோட்டுகள் 100 சதவீதம் காட்டனால் உருவாக்கப்படுகின்றன.
சிறப்பு தயாரிப்பு
ரூபாய் நோட்டுகள் தயாரிப்பின்போது 75 சதவீதம் காட்டனும், 25 சதவீதம் லினனும் (linen) பயன்படுத்தப்படுகின்றன. ஜெலட்டின் பிசின் கரைசலுடன் இந்த காட்டன் கலக்கப்பட்ட பின்னர் அச்சடிக்கும் பணிகள் துவங்குகின்றன. இந்த கரைசல் ரூபாய் நோட்டு நீண்ட கால பயன்பாட்டிற்கு உழைக்க உதவுகிறது. ஐரோப்பாவில் கரன்சி தாள்களுக்கு காம்பர் நொயில் பருத்தி பயன்படுத்தப்படுவதாக Royal Dutch Kusters நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காம்பர் நொயில் பருத்தி என்பது குறுகிய இழைகளை கொண்டதாகும். இவை ஸ்பின்னிங் படிநிலையில் அகற்றப்பட்டு ரூபாய் நோட்டுகளுக்கான பருத்தி பெறப்படுகிறது. இருப்பினும் இருப்பினும், கரன்சி நோட்டுகளில் பயன்படுத்தப்படும் பருத்தி, லினன் மற்றும் பிற பொருட்களின் விகிதம் வங்கிகளால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களினால் இந்த தகவலை எந்த நாடும் வெளியிடுவதில்லை.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 22ன் படி, இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இலகு தன்மை, எளிதில் அச்சடிக்க கூடியது ஆகிய காரணத்தினால் காட்டனால் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கபடுகின்றன.