'செல்போன்' பேசியதால் ஏற்பட்ட சந்தேகம்... சுற்றி நின்று 'வேடிக்கை' பார்த்த ஊர் மக்கள் ....'சிறுமி'க்கு நேர்ந்த 'கொடூரம்'
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்புர் என்னும் பகுதியில் சிறுமி ஒருவர் வேறு ஒரு சிறுவனுடன் செல்போனில் பேசியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிறுமியை கொடூரமாக தாக்கி, ஊரார் முன்னிலையில் சிறுமியின் தலை முடியை வெட்டி கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரார் முன்னிலையில் அச்சிறுமியின் தலைமுடியை வெட்டிய போது சுற்றி இருந்தவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டும், செல்போனில் படம் பிடித்துக் கொண்டும் இருந்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி தீராஜ் பாபர் கூறுகையில், 'சிறுமியை தாக்கிய குடும்பத்தினர் மூன்று பேரை கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். சமூகத்தில் இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்கும் நிலையில், குடும்பத்தாரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.
