சூப்பரான முயற்சி.. பாராட்டிய நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த அசாம் முதல்வர்.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ அசாம் மாநில அரசை பாராட்டியுள்ள நிலையில், இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார் அசாம் முதல்வர்.
Images are subject to © copyright to their respective owners.
ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் லியனார்டோ டிகாப்ரியோ. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலமாக பல்வேறு வன உயிரிகள் பாதுகாப்புக்கு உதவி வருகிறார். இந்நிலையில், ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாக்கும் முயற்சியில் அசாம் மாநில அரசின் செயல்பாட்டை அவர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில்,"2021 ஆம் ஆண்டில், இந்திய மாநிலமான அசாமில் அரசாங்கம் காசிரங்கா தேசியப் பூங்காவில் அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை முடிவுக்குக் கொண்டு வர புதிய திட்டத்தை அமல்படுத்தியது. 2000 மற்றும் 2021 க்கு இடையில் சுமார் 190 விலங்குகள் கொம்புகளுக்காக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியது. 2022 ஆம் ஆண்டில் அசாம் அந்த இலக்கை எட்டியது. 1977 க்குப் பிறகு முதல் முறையாக இப்பகுதியில் காண்டாமிருகங்கள் வேட்டையாடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது".
Images are subject to © copyright to their respective owners.
"காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது உலக ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும். இந்திய அரசின் இந்த வெற்றியினால் சில நன்மைகளும் நடந்துள்ளன. உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையின்படி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 200 ஆக இருந்த அரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தற்போது சுமார் 3,700 ஆக உயர்ந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், டிகாப்ரியோவின் பதிவுக்கு நன்றி தெரிவித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்திருக்கிறார். அதில்,"வனவிலங்குகளைப் பாதுகாப்பது எங்களது கலாச்சார அடையாளத்துடன் ஒருங்கிணைந்ததாகும். எங்கள் வளமான கலாச்சார பாரம்பரியத்தை விடாமுயற்சியுடன் பாதுகாப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். லியானோ உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Preserving wildlife is integral to our cultural identity.
We are dedicated to persevering and safeguarding our rich cultural heritage.
Thank you for your kind words, @LeoDiCaprio, and I extend a warm invitation to you to visit @kaziranga_ and Assam. pic.twitter.com/iYhkvbT3I3
— Himanta Biswa Sarma (@himantabiswa) February 9, 2023
Also Read | எதே 2 காபி ரூ.3.6 லட்சமா?.. அதிர்ச்சியான தம்பதி.. அப்புறம் தான் உண்மையே தெரிஞ்சிருக்கு..!