உலக இரும்பு மனிதன் போட்டியில்.. தடம் பதித்த குமரி வீரர்.. தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வெச்ச சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Mar 05, 2023 01:35 PM

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள தாமரைக்குட்டி விளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது. உடற்கல்வி பயிற்சியாளராக இருக்கும் இவர் ஏற்கனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்னும் பட்டத்தை பெற்றவர் ஆவார்.

Kanyakumari man achieved in world iron man competition won silver

நாகர்கோவிலில் சுமார் 9.5 டன் எடை கொண்ட லாரியை கயிற்றால் இழுத்தது உள்ளிட்ட பல்வேறு சாகசங்களையும் செய்து மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக இருக்கும் கண்ணன், சமீபத்தில் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

உலக இரும்பு மனிதன் போட்டி

அதே போல, உலக இரும்பு மனிதன் போட்டி முதல் முறையாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஆண்களுக்கு நிகராக நிறைய பெண்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சாகசம் புரிந்திருந்தனர்.

Kanyakumari man achieved in world iron man competition won silver

வெள்ளிப் பதக்கம் வென்ற கண்ணன்

மேலும் இதன் 85 கிலோ எடை பிரிவு போட்டியில் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டிருந்தார். இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இந்த போட்டியில் லாக் பிரஸ், யோக் வாக், டயர் ஃப்ளிப் மற்றும் ஸ்டோன் என்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் இடத்தை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் என்ற வீரர் பிடித்திருந்தார்.

Kanyakumari man achieved in world iron man competition won silver

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை கண்ணன் பிடித்து வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார். ஏற்கனவே இரும்பு மனிதன் என புகழ் பெற்று வந்த நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன், தற்போது உலக இரும்பு மனிதன் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளது பல தரப்பிலான மக்களின் பாராட்டுகளையும் அவருக்கு பெற்று கொடுத்துள்ளது.

Kanyakumari man achieved in world iron man competition won silver

இந்த நிலையில் பஞ்சாப்பில் நடைபெற்ற உலகின் மனிதன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கண்ணன் சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags : #KANNAN #WORLD IRON MAN CHAMPIONSHIP

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kanyakumari man achieved in world iron man competition won silver | India News.