'மாடியில இருந்து குதிச்சு, 'நாய்' தற்கொலை!' - எஜமானியம்மா இறந்த துக்கம் தாங்காமல் 'அதிர்ச்சியில்' செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்லமாக வளர்த்த நாய் தன் உரிமையாளர் இறந்தவுடன் வளர்ப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்னும் பெண் மருத்துவர் சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து பார்ரா -2 மாலிக்புரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் அடிபட்டு பரிதாப நிலையில் இருந்த நாயை, மனது தாங்காமல் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் நாய்க்கு ஜெயா என பெயரிட்டு அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மிகவும் பாசமாக இருந்துள்ளார்.
மருத்துவர் அனிதா வெளியே சென்று வீட்டிற்கு திரும்பும் போது அவரை அன்பு தொல்லை செய்து விடும் என அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர் அனிதா கடந்த புதன்கிழமை உடல்நிலை சரியில்லாத நிலையில், உயிரிழந்து மருத்துவமனையில் இருந்து சடலமாக வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
மருத்துவர் அனிதாவை பார்த்த ஜெயா அவர் மேல் குதித்து தடவியுள்ளார். ஆனால் அனிதா எவ்வித செய்கையும் காட்டாததால் நாய் ஜெயா சோகமாக காணப்பட்டதாக கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து கூறிய மருத்துவர் அனிதாவின் மகன், 'என் தாயின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த தருணத்தில், நாய் குரைத்து அழ தொடங்கியது. பின்னர், அவள் மாடிக்குச் சென்று கட்டிடத்திலிருந்து குதித்தாள். நாய் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் ஜெயாவின் முதுகெலும்பு உடைந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது ' என தேஜாஸ் கூறினார்.
மேலும் நாயின் மரணம் குறித்து செய்தி பரவியதால் பல உள்ளூர்வாசிகள் அந்த இடத்திற்கு அருகில் கூடியிருந்தனர். அதையடுத்து ஜெயா வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டார். மருத்துவர் அனிதாவிற்கும் இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.