'எனக்கு ஒரு ஐ.சி.யூ படுக்கை கிடைக்குமா?... 'ட்விட்டரில் பேராசிரியை வைத்த கோரிக்கை'... ஆனால், திடீரென எல்லாம் தலைகீழாக மாறிப்போன கொடுமை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 19, 2021 07:11 PM

தனக்கு ஒரு  ஐ.சி.யூ படுக்கை வேண்டும் எனக் கேட்ட பேராசிரியைக்கு நடந்த துயரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jamia professor request looking for a bed for herself, dies of Covid

ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் நபிலா சாதிக். இவர் ஜே.என்.யுவின் பி.எச்.டி செய்து வரும் மாணவர்களுக்கு அவர்களின் ஆய்வறிக்கையைத் தயாரிக்க உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் அவரது தாயார் நுஜாத் கொரோனா தொற்று ஏற்பட்டு பரிதாபமாக இறந்து போனார்.

Jamia professor request looking for a bed for herself, dies of Covid

தாயின் இறப்பைத் தாங்குவதற்குள் அவரது தந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் மே 2ஆம் தேதியன்று நபிலா பதிவிட்ட ட்விட்டர் பதிவில் ''இந்த விகிதத்தில் கொரோனா பரவினால் யாரும் டெல்லியில் குறைந்தபட்சம் உயிருடன் இருக்க மாட்டார்கள்'' எனத் தெரிவித்திருந்தார். இது தான் அவர் பதிவிட்ட கடைசி ட்விட்டர் பதிவாகும்.

இந்நிலையில் ஜாமியாவை சேர்ந்த மாணவர்கள் கூறும்போது, ''பேராசிரியையின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிந்ததும், மற்ற மாணவர்களுடன் நாங்கள் அவருக்காகப் படுக்கைகளைத் தேட ஆரம்பித்தோம். இறுதியாக அவர் அல்ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், நாங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட அவரது தாயை சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

Jamia professor request looking for a bed for herself, dies of Covid

ஆனால் அவர் காலமானார். மே 7 அன்று அவரது தாயின் இறுதி சடங்குகளைச் செய்ய மாணவர்கள் உதவினார்கள். அதே நேரத்தில், நபிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அவரது ஆக்ஸிஜன் அளவு 32% ஆக குறைந்தது. சி.டி ஸ்கேன் செய்தபின், அவரது நுரையீரல் மிகவும் சேதமடைந்ததாக மருத்துவர்கள் கூறினார். சனிக்கிழமை இரவு வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டவர் திங்கட்கிழமை இரவு காலமானார்” எனத் தெரிவித்தனர்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jamia professor request looking for a bed for herself, dies of Covid | India News.