'நீங்க இந்தியனா?'...'இந்திய உணவாகத்திலேயே இந்தியருக்கு நேர்ந்த அவமானம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 22, 2019 03:48 PM

அயர்லாந்தின் டர்பன் நகரில் உள்ள பிரபல ஹோட்டல்  ’ரவிஸ் கிச்சன்’. இந்த ஹோட்டலுக்கு அயர்லாந்தில் வசிக்கும் இந்தியரான மயங்க் பட்நாகர் என்பவர், தனது நண்பர்களுடன் உணவு அருந்த சென்றுள்ளார். ஹோட்டலில் சென்று அமர்ந்த அவரிடம் யாரும் வந்து உணவுக்கான ஆர்டரை எடுக்கவில்லை.

Indian restaurant ordered to pay 3000 euro

இந்நிலையில் உணவாகத்தின் இந்த செயலால் கடுப்பான மயங்க், அங்கிருந்த பெண் சர்வரிடம், ஏன் என்னிடம் வந்து உணவுக்கான ஆர்டரை எடுக்கவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் சர்வர் ‘நீங்கள் இந்தியர், உங்களுக்கு இங்கு உணவு வழங்குவதில்லை’ என கூறியுள்ளார். உணவகத்தின் இந்த செயல் மயங்க் பட்நாகருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்திய உணவகத்திலேயே இந்தியருக்கு இந்த நிலையா என்ற வேதனையுடன் அங்கிருந்து சென்ற அவர், அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தார்.

தனக்கு நேர்ந்த அவமானம் மற்றும் மன உளைச்சலுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த வருடம் நடந்த இந்த சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்தியருக்கு உணவு வழங்காத அந்த ஓட்டலுக்கு ரூ.3 ஆயிரம், யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை பட்நாகருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : #INDIAN RESTAURANT #INDIAN CUSTOMER #RAVI SHUKLA