'இந்தியாவுக்கு இருக்கும் 'மூன்று' பெரிய ஆபத்து'... 'எச்சரித்த மன்மோகன் சிங்'... பீதியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது இந்தியாவுக்கு 3 பெரிய ஆபத்து இருப்பதாக, முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மன்மோகன் சிங் எழுதியுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தற்போது மும்முனை ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் ஆகிய மும்முனை ஆபத்துகள் இந்தியா முன் நிற்கிறது. சமூக விரோதிகளும், அரசியல்வாதிகளும் மத வன்முறையை தூண்டி விடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகங்கள், பொது இடங்கள், வீடுகள் என எல்லாவற்றிலும் மத வன்முறையின் கோர முகத்தை காண முடிகிறது. இது, இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்துகிறது.
மக்களை காக்க வேண்டிய தர்மத்தை செய்யும் பாதுகாப்பு படைகள் கூட மக்களை கைவிட்டு விட்டது. நீதித்துறையும், ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை துறையும் கூட நம்மை கைவிட்டு விட்டன. நாடு முழுவதும் பரவியுள்ள பதற்றம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அது இந்தியாவின் ஆன்மாவையே ஆட்டம் காண வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்துக்கே முன்னுதாரணமான பொருளாதார வளர்ச்சியை கண்ட இந்தியா, தற்போது பொருளாதார சீரழிவை சந்தித்துள்ளது.
பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும்போது, அதனால் மதமோதல்கள் மேலும் அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை மேற்கொள்ள தயங்குகிறார்கள். மத மோதல்கள், அவர்களின் அச்சத்தை அதிகரிக்கிறது. அதோடு கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்த வந்துள்ளது. அதற்கு மத்திய அரசு உடனடியாக ஒரு அவசர குழுவை உருவாக்க வேண்டும். பிரச்சினையை கையாளும் பொறுப்பை அதனிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதமர் மோடி, வெறும் வார்த்தைகளால் இல்லாமல், தனது செயல்களால் நாட்டு மக்களிடம் நம்பிக்கை உருவாக்க வேண்டும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதோடு குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள கட்டுரை தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது எழுந்திருக்கும் இந்த மூன்று பிரச்சனைகளும் மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
