'டெய்லி என்ன அடிப்பாங்க சார்...' 'தெருவிலேயே நில்லு' என மாமியார் கொடுத்த மெண்டல் டார்ச்சர்... - பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மருமகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 7 வருடங்களாக கணவர் மற்றும் மாமியார் செய்த சித்திரவதை தாங்காமல் 31 வயதான பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் மீது உடல் மற்றும் மன சித்திரவதை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் கடந்த 2013 ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டே தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமடைந்திருக்கும் போதே அவரது மாமியார் அவரை கொடுமைப்படுத்தியதாக குறிப்பிடுகிறார். மேலும் கர்ப்ப காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வேலை செய்ய விரும்பவில்லை என்றால் அவள் பெற்றோரின் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவரது கணவருக்கு 2014-ம் ஆண்டு மும்பையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, குடும்பத்துடன் மும்பையில் குடிபெயந்துள்ளனர். ஆனால் அங்கே சென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நிம்மதி அடையவில்லை, உறவினர்கள் மற்றும் தன் தாத்தாக்களின் பேச்சை கேட்டு அவரது கணவர் சித்திரவதை செய்ய தொடங்கியுள்ளார். மேலும் தினமும் அடிப்பதும், மன ரீதியாக துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
அடிக்கடி மனைவியை தாக்கிய கணவர், பாதிக்கபட்ட பெண்ணின் பெற்றோரை தகாத வார்த்தைகளில் திட்டி, மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்காக அவர்களிடம் இருந்து பணம் வாங்கி வருமாறும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மும்பையில் இருந்த தனது மனைவி மற்றும் மகளை தனியே விட்டு தன் தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். செலவிற்கு பணம் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் மகளும் அகமதாபாத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி, மகளை கூட்டிக்கொண்டு அந்த பெண்மணி, தன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கணவரும் மாமியாரும் சேர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்மணியையும் சிறுமியையும் வீட்டிற்குள் சேர்க்காமல் தெருவிலேயே நிற்க வைத்துள்ளனர்.
இதன்காரணமாக பல வருடங்கள் பல சித்திரவதைகளை பொறுத்துக் கொண்ட அந்த பெண் கடந்த வியாழக்கிழமை (16.07.2020) வாஸ்த்ராபூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் போலீசார் அவரது கணவர் மற்றும் அவரின் குடும்பத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்