கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணை துண்டுதுண்டாக்கி சாக்குப்பையில் போட்டு வீசிய கொடூரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 15, 2019 08:10 PM

பந்தேஷ்வரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜோனாஸ் ஜோலின் சாம்சன் (36), விக்டோடியா மத்தியாஸ் (46) ஆகிய இருவரையம் 4 நாட்களுக்குள் போலீஸார் கைது செய்துள்ளனர்.

couple arrested for murder of mangalore women srimathi shetty

கொலை செய்யப்பட்ட ஸ்ரீமதி, தன்னிடம் சாம்சன் வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையாலேயே இந்தக் கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.1 லட்சத்தைக் கடனாகப் பெற்ற சாம்சன் வெறும் ரூ.40000ஐ மட்டுமே திருப்பித் தந்துள்ளார். மீதிப் பணத்தைத் திருப்பிக் கேட்க வீட்டுக்கு வந்த ஸ்ரீமதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரைக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் போட்டு நகரின் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பழக்கடை அருகே பண்டுவா கல்லூரி ஜங்ஷனில் ஸ்ரீமதியின் தலைப்பகுதியும், பதுவா அருகே கால் பகுதியும் கண்டறியப்பட்டது. கைது செய்யச் சென்ற போது தற்கொலைக்கு முயன்ற சாம்சனை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர் மீது 2010ல் ஒரு கொலை வழக்கு பதிவுப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : ##MANGALORE #MURDER