"கண்டிப்பா சுஷாந்த் தற்கொல பண்ணிக்கல"... 'கொல' தான் நடந்துருக்கு... 'ஆதாரத்துடன்' அடித்து சொல்லும் சுப்பிரமணியன் 'சுவாமி'... பரபரப்பு 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 30, 2020 04:19 PM

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

BJP subramanian swamy share evidence for sushant death is murder

இதனையடுத்து, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது நண்பர்கள், உறவினர்கள், முன்னாள் காதலி உட்பட சில பாலிவுட் பிரபலங்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்திருப்பதாக தனக்கு சந்தேகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருந்தார். அதில் சில பாலிவுட் பிரபலங்கள் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது தான் ஏன் சுஷாந்த் சிங் மரணம் அடைந்திருப்பதாக சந்தேகப்படுவதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதாரமாக வெளியிட்டுள்ளார். அதில், தற்கொலை எது, கொலை எது என்பது குறித்து விளக்கியுள்ளார். தூக்கில் தொங்க பயன்படுத்தப்பட்ட துணி, சுஷாந்த் சிங் உடலில் இருந்த காயங்கள், சிம் கார்ட் அடிக்கடி மாற்றி சுஷாந்த் பயன்படுத்தியது என பலவேறு சந்தேங்கங்களை கொண்டு சுப்ரமணிய சுவாமி இது கொலை தான் என தெளிவாக கூறுகிறார். அவர் மொத்தம் பட்டியலிட்ட 26 விஷயங்களில் 2 மட்டுமே தற்கொலைக்கான காரணத்தை விளக்குவதாக உள்ளன. மற்றவை அனைத்தும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதை காட்டுவதாக உள்ளது.

 

 

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக ஏற்கனவே பல சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், தற்போது சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BJP subramanian swamy share evidence for sushant death is murder | India News.