'அபராத கட்டணங்களை உயர்த்தும் வங்கிகள்...' இனி ATM-ல எத்தனை முறை பணம் எடுக்கலாம்...? - ஆகஸ்ட் 1 முதல் அமலில் வரும் புதிய நடைமுறை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆகஸ்ட் மாதம் முதல் வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் இருப்பு தொகை மற்றும் பணம் கையாளும் கட்டணத்தை உயர்த்த வாங்கிக்கலாம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்சம் 1000 முதல் அதிகபட்சம் 5000 மற்றும் அதற்குமேல் இருப்புத்தொகை வைக்கும் வங்கிக்கணக்குகளை பயன்டுத்துவோர் அதிகம். நகரம் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ஏற்ப இந்த இருப்பு தொகை மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சேமிப்பு கணக்குகளில் இருப்பு தொகை குறைந்தால் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. அடிப்படை வங்கி கணக்குகள் சிலவற்றுக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு.
இந்த நிலையில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கோடக் மகிந்திரா வங்கி, ஆர்பிஎல் வங்கி போன்ற வங்கிகள் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தங்களின் குறைந்த பட்ச சராசரி இருப்பு தொகை அளவு மற்றும் பணம் கையாள்வதற்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குமுன் பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் இருந்த இருப்பு தொகை ரூ.1,500 ஆனது இனி ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் எனவும், ரூ.2000திற்கு குறைந்தால் கிராமப்புற கிளைகளில் ரூ.20 பெருநகரங்களில் ரூ.75 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளன. மேலும் சேமிப்பு அல்லாத நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் மதிப்பு ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
ஆக்சிஸ் வங்கியில் இதற்கு முன்பு கட்டணம் வசூலிக்கப்படாத இசிஎஸ் பரிவர்த்தனைக்கு தற்போது ரூ.25 வசூலிக்கப்போவதாக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 போன்ற குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது.
மூன்றாவதாக கோடக் மகிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு முதல் 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு பணம் எடுக்க ரூ.20, இருப்பு பார்ப்பது போன்றவற்றுக்கு ரூ.8.50, இதுபோல் கணக்குகளுக்கு ஏற்ப பணம் எடுப்பதற்கு 4வது பரிவர்த்தனைக்கு ரூ.100 வசூலிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.