'நடுராத்திரியில கேட்ட பியானோ சத்தம்...' 'கத்தியோட வந்த அப்பா...' என்ன நடந்தது...? நள்ளிரவில் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு பகுதியில் பியானோவின் சத்தத்தை குறைக்க சொன்னபோது, தந்தைக்கும் மகளுக்கும் நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் ஒரு பிளாட்டில் வசிக்கும் மென்பொறியியலாளரான 46 வயது சப்டக் பேனர்ஜி என்பவர் அவரின் 15 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி 9 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சப்டக் பேனர்ஜி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் மெக்கியம் அடிக்கடி பிள்ளைகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தன் இரு குழந்தைகளையும் பள்ளிக்கும் அனுப்பாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழன் சப்டக் பேனர்ஜி விடியற்காலை 1.30 மணிக்கு எழுந்து மின்னணு விசைப்பலகை (பியானோ) வாசிக்க தொடங்கியுள்ளார். வீட்டில் இருந்த அவரின் 15 வயது சிறுமி சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத தந்தை மீண்டும் வாசிக்க தொடங்கியுள்ளார்.
'நான் படிக்கவேண்டும் சத்தத்தை குறைங்க, சவுண்டை கொறைங்க. இல்லனா பக்கத்து வீட்ல போலீசை கூப்பிடுவாங்க' என பலவாறு கெஞ்சியுள்ளார். ஆனால் சிறுமியின் தந்தை வாசிப்பதை நிறுத்தததால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
ஆத்திரமடைந்த தந்தை சமையலறைக்கு சென்று கத்தியுடன் வந்து மகளை தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் முதுகு, தோள்பட்டை மற்றும் கையில் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 15 வயது சிறுமி தனது தந்தையை தள்ளி விட்டுள்ளார், அப்போது கத்தி அவரது மார்பு வழியாக துளைத்ததாக கூறப்படுகிறது.
தந்தையின் காயத்தை கவனிக்காத சிறுமி வேறொரு அறையில் சென்று கதைவடைத்து இருந்துள்ளார். சிறுமியின் தந்தையும் தன் வாசிப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில், சிறுமியின் சகோதரர் துக்கத்திலிருந்து எழுந்துவந்து பார்க்கும் போது, அவரது தந்தை இரத்த வெள்ளத்தில் பார்த்து அதிச்சியடைந்துள்ளார்.
மேலும் தன் அக்காவை எழுப்பி இருவரும் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஐபிசி பிரிவு 304ன் கீழ்(கொலைக்குரிய குற்றமில்லை) வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இறந்த பொறியாளரின் மனைவி இறந்ததில் இருந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.