'300 டன் எடைகொண்ட பாகுபலி'.. 'ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ளும் பிரம்மாண்டம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 22, 2019 07:39 PM
இந்தியாவின் இஸ்ரோவில் இருந்து சந்திராயன் - 2 செயற்கைக்கோள், இன்று வெற்றிகரமாக விண்ணில் இதனையடுத்து நிலவில் செயற்கைக் கோள்களை தரையிறக்கும் 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா அடைகிறது.
முன்னதாக கடந்த 15-ஆம் தேதி நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான செயற்கைக் கோளை ஏவ இஸ்ரோ முயற்சித்தபோது, கடைசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான், தொழில்நுட்ப சிக்கல் கண்டறியப்பட்டதோடு, அந்த ராக்கெட்டில் இருந்த பிரச்சனை காரணமாக தற்காலிகமாக, விண்ணில் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது.
எனினும் 48 நாட்களில் விண்ணை அடையும் புதிய இலக்குடன், சந்திராயன் நேற்று மாலை 6.45 மணிக்கு தொடங்கிய 20 மணி நேர கவுண்ட் டவுன் கணக்கில் இன்று மதியம் 2.45க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், பாகுபலி திரைப்பட நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராமில், ஜிஎஸ்எல்வி எம்.கே-3 ராக்கெட் பாகுபலி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதை புகழும் விதமாக ‘டார்லிங்ஸ். சந்திராயன் - 2ஐ இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் தரக்கூடிய மிகப்பெரிய தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘பிரம்மாண்ட கலைப்படைப்பாக வந்த பாகுபலி போலவே, பல வருட கடின உழைப்பில் செலுத்தப்பட்டுள்ள இந்த ராக்கெட் எங்கள் படக்குழுவுக்கு மேலும் கவுரவத்தை அளிக்கிறது. 300 டன் எடை சுமக்கும் கொள்ளளவுடன் இந்த விண்கலம் உருவாகியிருப்பது இதுவே முதல் முறை. இந்தியா மேலும் வலுப்பெறுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.