'எப்படி பணம் சம்பாதிக்கலாம்னு யோசிச்சேன்...' 'இருக்கவே இருக்கு யூடியூப்...' வேலை இல்லாததால் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்... !
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த இளைஞர் யூடியூப் பார்த்து ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பின்பற்றப்படவுள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி சுய்ப்ரே தெருவில் இயங்கும் ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகதில் உள்ள ஏ.டி.எம்-ல் கடந்த 12-ஆம் தேதி இரவு பணம் திருட முயற்சித்துள்ளார் ஒரு இளைஞர். இரவு நேரத்தில் வந்த அவர் ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுப்பது போல அங்கிருந்த ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
தீடீரென அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வங்கியிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை வைத்து விசாரணை மேற்க்கொண்டனர்.
கேமராவில் தெரிந்த அவரின் போட்டோவை வைத்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபர் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியை சார்ந்த பிரபு என கண்டுபிடித்துள்ளனர். அதையடுத்து பிரபுவை பிடித்து விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
தான் புதுச்சேரியில் இயங்கும் ஒரு பேக்கரி வேலை செய்து வந்ததாகவும், இப்போது கொரோனா அச்சத்தால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் வேலையும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் தவித்து வந்ததாக கூறியுள்ளார். இதனால் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என யோசித்து தனது மொபைலில் யூடியூப் பார்த்து அதன்மூலம் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததாகவும், உடைக்க தெரியாமல் உடைந்ததால் அலாரம் அடித்தது என கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய, காவல் கண்காணிப்பாளர் மாறன் பிரபு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர கிக்கர், ராடு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி, அவரை சிறையில் அடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
