'கச்சா பாதாம்' பாடலுக்கு TOUGH கொடுக்கும் போலயே.. வைரலாகும் லெமன் சோடா சாங்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Apr 11, 2022 04:59 PM

லெமன் சோடா தயாரிக்கும் நபர் ஒருவரின் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

After Kacha Badam This Lemonade Seller song goes viral on social media

பாத்தாலே பதறுதே.. ஆனந்த் மஹிந்திரா ஷேர் பண்ண த்ரில் வீடியோ..!

பாடல்

இந்த உலகில் மொழிகளை கடந்து மனிதர்களால் கொண்டாடப்படும் சில விஷயங்களில் பாடலும் உண்டு. வேற்று மொழி பாடலையும் அதன் அர்த்தம் புரியாவிட்டால் கூட நாம் முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவோம். இணைய வெளிகளில் மனிதர்கள் அதிகம் புழங்க துவங்கிவிட்ட இந்த காலத்தில் உலகத்தின் ஏதோ ஒரு வசிக்கும் நபர் கூட தன்னுடைய திறமையை இந்த உலகத்தின் கவனத்திற்கு எளிதில் கொண்டுவர முடியும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த நீண்ட லிஸ்டில் இப்போது சேர்ந்திருக்கிறார் இந்த லெமன் சோடா தயாரிப்பாளர்.

After Kacha Badam This Lemonade Seller song goes viral on social media

லெமன் சோடா

கவுரவ் சாகர் என்பவர் பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில் லெமன் சோடா தயாரிக்கும் நபர் தனக்கே உரித்தான தாளத்தில் பாடுகிறார் அதில், சோடாவில் தான் என்னென்ன பொருட்களை சேர்க்கிறேன் என்றும் அனல் மிகுந்த வெயில் காலங்களில் எலுமிச்சம்பழ பானம் நம்முடைய உடலுக்கு அளிக்கும் நன்மைகள் குறித்தும் மெட்டெடுத்து பாடுகிறார்.

After Kacha Badam This Lemonade Seller song goes viral on social media

இவரது இந்த வித்தியாசமான பாடலை கேட்க எப்போதும் மக்கள் கூட்டம் இந்த கடையில் அலைமோதுகிறது.

கச்சா பாதாம்

சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பூபன் பத்யாகர் என்னும் வேர்க்கடலை வியாபாரி தன்னுடைய பாடல் மூலம் பலராலும் பேசப்பட்டார். 'கச்சா பாதாம்' என பாடிக்கொண்டே இரு சக்கர வாகனத்தில் வேர்க்கடலை வியாபாரம் செய்துவந்த அவரை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட நம்ப முடியாத அளவுக்கு அந்த பாடல் சமூக வலை தள மக்களின் ஆதரவை பெற்றது.

முன்னணி நடிகைகள் கூட இன்ஸ்டா ரீல்சில் இந்த பாடலுக்கு நடனமாடினர். இதனை அடுத்து, யூடியூப் உள்ளிட்ட பல சோசியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்திவருகிறது இந்த கச்சா பாதாம் பாடல். இந்த பாடலின் ரீமிக்ஸ் உரிமையின் மூலமாக பூபன் பத்யாகருக்கு 3 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

After Kacha Badam This Lemonade Seller song goes viral on social media

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 'Baaki nimbu baad vich paunga' (மீதியுள்ள எலுமிச்சம்பழங்களை பிறகு பயன்டுத்துகிறேன்) என்ற பாடல் இணையத்தில் வைரலாக வலம்வருகிறது.

கமெண்ட்ஸ்

இந்த வீடியோ இதுவரையில் 9.21 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், நெட்டிசன்கள்,"உங்களுடைய தன்னம்பிக்கை கவர்கிறது" என்றும் "கச்சா பாதாமின் பையன் இந்த பாடல்" எனவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

 

மனிதர்களை போலவே வாய்.. Beach ல கரை ஒதுங்கிய வித்தியாசமான உயிரினம்.. வைரல் புகைப்படம்..!

 

Tags : #KACHA BADAM #LEMONADE SELLER SONG #கச்சா பாதாம் #லெமன் சோடா சாங்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. After Kacha Badam This Lemonade Seller song goes viral on social media | India News.