காய்கறி விற்ற ஐ.டி பெண்ணுக்கு உதவியதை அடுத்து’... ‘ஒரு படி மேலே’ போய் சோனு சூட்டின் ‘நெகிழவைத்த’ அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊருக்கு செல்வதை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அந்த மக்களுக்கு வாகன ஏற்பாடு செய்து கொடுத்து அண்மையில் அனுப்பி வைத்த தொடர் சம்பவங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றன.
அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளை செய்து கொடுத்த சோனு சூட் அண்மையில் வேலை இழந்து காய்கறி வியாபாரம் செய்த ஐடி பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது மிகப் பெருமளவில் வைரலானது.
இதேபோல் மாடு வாங்குவதற்கு பணம் இல்லாமல் தனது இரண்டு மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி ஒருவருக்கு, சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்த சம்பவமும் இந்திய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வில்லன் நடிகர் சோனு சூட் இயல்பு வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை ஒட்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சோனு சூட் அறிவித்துள்ளார். நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் ஆகிய வசதிகளோடு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய தமது அனுபவத்தை புத்தகமாக எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.