'தடுப்பூசி தயாரிக்கிறது ஒரு குத்தமா'?... 'போனை எடுத்தாலே இத தான் கேக்குறாங்க'... பயத்தில் சீரம் நிறுவன ஓனர் எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35.66 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தைக் கடந்துள்ளது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்த முதல் நாடு இந்தியா ஆகும். உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,10,77,410 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, அதிரடி புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில்,''தடுப்பூசி கேட்டுப் பல மாநில முதல்வர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மிரட்டுவதாக'' கூறியுள்ளார்.
ஏற்கனவே அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஆதார் பூனவல்லாவிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பூனவல்லா சார்பில் அவரது வழக்கறிஞர் தத்தா மானே மனுவைத் தாக்கல்செய்தார்.