'ராமர் கோவிலுக்கு நன்கொடை'... 'பவுன்சாகி திரும்பி வந்த 15 ஆயிரம் காசோலைகள்'... 'மதிப்பு மட்டும் இத்தனை கோடியா'?... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாராமர் கோவிலுக்கு நன்கொடையாகத் திரட்டப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் திரும்பி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக விசுவ இந்து பரிஷத் அமைப்பு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நன்கொடை திரட்டியது. பலரும் தொடர்ந்து நன்கொடை வழங்கி வந்தனர். அந்த வகையில் கோவில் கட்டுமானத்திற்குத் திரட்டப்பட்ட 15 ஆயிரம் வங்கி காசோலைகள் திரும்பி வந்து விட்டன.
திரும்பி வந்த காசோலைகளின் மதிப்பு மட்டும் 22 கோடி ஆகும். இதற்கு நன்கொடை அளித்தவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததும், சில தொழில்நுட்ப தவறுகளுமே காரணம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நன்கொடை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், கோவில் கட்டுமானத்திற்காக இதுவரை 5,000 கோடி ரூபாய் வசூலானதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இறுதி தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை ராமஜென்ம பூமி அறக்கட்டளை இன்னும் வெளியிடவில்லை.