கதறி கதறி அழுத சுட்டி குழந்தை....நொடியில் போட்ட குத்தாட்டம்! அம்மா செய்த வைரல் காரியம்.. CUTE வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்உலகத்தின் மிகவும் கஷ்டமான காரியங்களில் ஒன்று குழந்தைகளை சமாளிப்பது. எப்போது அழுவார்கள்? எப்போது சிரிப்பார்கள் என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத சிதம்பர ரகசியம் தான். ஆனால், குழந்தைகளுக்கு எது பிடிக்கும்? எதன்மூலம் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய வைக்க முடியும் என்பது அம்மாக்களுக்கு எப்போதுமே கைவந்த கலை.

அப்படி, கதறி கதறி அழுதுகொண்டு இருந்த சுட்டி சிறுவன் ஒருவனை ஒரு நொடியில் குத்தாட்டம் போட வைத்து இருக்கிறார் அந்த சிறுவனின் அம்மா. தற்போது இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அழுகை
எதுக்கு இப்படி அழுகுறான்? அப்படித்தான் தோன்றும் அந்த வீடியோவை முதலில் பார்த்த உடன். அப்படி, கண்ணீர் வழிய கதறி கதறி அழுகிறான் அந்தச் சிறுவன். அருகில் இருக்கும் அம்மா அவனை சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனாலும், சிறுவனின் கண்ணீர் நிற்கவில்லை.
குத்தாட்டம்
இந்த நிலையில், உடனடியாக பாடல் ஒன்றினை ஒலிக்கச் செய்கிறார் அந்த சிறுவனது அம்மா. அப்போது, அழுதுகொண்டு இருந்த சிறுவன், உடனடியாக அழுகையை மறந்து அருகில் நின்று கொண்டிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறான். பாடல் பீட் எகிற, தன்னை மறந்து குழந்தையும் ஆட்டம் போடுகிறது. பின்னர், பாடலை நிறுத்திய பிறகு மீண்டும் தனது அழுகையை தொடர்கிறான் அந்த விடாப்பிடி சிறுவன்.
அழுதுகொண்டிருந்த சிறுவன், பாடலை கேட்டதும் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இசையால் மயங்காதார் இதயம் எது...?🎵🎵🎵 pic.twitter.com/5vahNQre8D
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 3, 2022
கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இளைஞர் போட்ட வேறலெவல் ப்ளான்.. செம வைரல்..!

மற்ற செய்திகள்
