'லோன் வாங்குனவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' 'வேலை இழந்தவங்க, பாதி சம்பளக்காரங்களுக்கு...' - ஈஎம்ஐ கட்டுறதுல சலுகைகள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மக்களின் இயல்பு வாழ்க்கையும், தொழில் முறை நிறுவனங்களும் தேக்க நிலைக்கு தள்ளபட்டுள்ளன.
தற்போது ஊரடங்கு முறைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும் இயல்பு நிலை எட்டவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் தினக்கூலிகளும், மாத சம்பளம் வாங்குபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வழக்கமான ஊதியம் கிடைக்காமல் மக்கள் அவதியுறும் நிலையில் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமானது என அறிவித்து மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. மேலும் இந்த அறிவிப்பு ஜூன்-31 வரையில் நீட்டிக்கப்பட்டது அதன் பிறகு ஆகஸ்ட்-31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு வங்கிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டாலும், அரசு தரப்பிலிருந்தும் ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்தும் கடன் சீரமைப்பு என்ற பெயரில் தேவையானோருக்கு ஈஎம்ஐ சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வீட்டுக் கடன் வாங்கியோருக்கு தவணைக் காலம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கும், முழு சம்பளம் வாங்காதவர்களுக்கும் ஈஎம்ஐ தொகையை சில மாதங்களுக்குக் குறைவாகச் செலுத்தும் சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து வங்கிகள் தரப்பிலிருந்து ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.