'நாங்க இந்தியாவை விட்டு போறோம்...' 'இளைஞர்களின் கனவாக இருந்த...' - பிரபல ஸ்மார்ட் பைக் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Aug 20, 2020 04:10 PM

விற்பனை காரணங்களுக்காக இந்தியாவை விட்டு வெளியேறுகிறது பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன்.

Harley-Davidson smart bike company leave from India

இளைஞர்களின் ஒரு கனவாகவும், இந்தியாவில் பிரபலமான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்று ஹார்லி-டேவிட்சன்.

அமெரிக்க நிறுவனமான இது கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து விற்பனை சந்தைக்குள் அடியெடுத்து வைத்தது. தொடக்கத்தில் இருந்து இன்று வரை இளைஞர்கள் பட்டாளம் ஹார்லி-டேவிட்சன் பைக்கின் மீது சொல்லில் அடங்காத ஈர்ப்பினை கொண்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற நிறுவனம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நம் நாட்டில் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து விற்பனை செய்வதற்காக அதன் தயாரிப்புகளின் பிஎஸ்-6 இணக்கமான மாடல்களையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்ட  அறிக்கைகளின்படி, இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் விற்பனை நலிவு, எதிர்காலம் குறித்த  நம்பிக்கையின்மை ஆகிய காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் செய்து வந்த அரியானாவில் உள்ள பாவல் தொழிற்சாலையில் பைக் அசெம்பிள் செய்யும் பணியை வேறு சில வாகன தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்க முயன்று வருகிறது.

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தியை நிறுத்தினாலும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட சுமார் 50 நாடுகளில் தனது விற்பனையை முடுக்கி விட தீர்மானித்துள்ளனர் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த தகவல்கள் ஹார்லி-டேவிட்சன் பைக் பிரியர்களுக்கு ஒரு பெருத்த இடியாக அமையும் எனவும்  இணையங்களில் கருத்துக்கள் வலம் வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Harley-Davidson smart bike company leave from India | Business News.