கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய் கிராமத்து சமையல் பிரியர்களுக்கான ஃபர்ஸ்ட் சாய்ஸ்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்தமிழகத்தின் தொன்மையை, அந்த மண்ணின் கலாச்சாரத்தை திரையில் கொண்டுவந்த பெருமை இயக்குனர் பாரதிராஜாவையே சேரும். குறிப்பாக தென் தமிழக மக்களின் உணவு உள்ளிட்ட மரபுசார் விஷயங்களை நுட்பத்துடன் வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவர் பாரதிராஜா. அவரைப் போலவே, தமிழக மக்களின் பாரம்பரிய சுவையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய்.
![Cardia Advanced Cold Pressed Gingelly Oil healthy tasty Cardia Advanced Cold Pressed Gingelly Oil healthy tasty](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/business/cardia-advanced-cold-pressed-gingelly-oil-healthy-tasty.jpg)
கிராமத்து மனம் வீசும் உணவுகளுக்காகவே கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய் உருவாக்கப்பட்டிருப்பது போல, ஒரு காலத்தில் நகர மனிதர்களை மட்டுமே படம் பிடித்த சினிமா கேமராவை மண் மனம் வீசும் கிராமங்களுக்கு கொண்டுசென்ற வரலாறு பாரதி ராஜாவிற்கு உண்டு. இந்நிலையில் அவரைப்போலவே கிராமத்து உணவுகளை மக்களுக்கு நியாபகப்படுத்தும் வகையில் கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதில் இயக்குனர் பாரதிராஜாவே தோன்றியிருப்பது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
கிராமத்து சமையல் பிரியர்களின் தேவைகளையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய். சுவை மட்டும் அல்லாது இதில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.
தமிழக சமையலில் பிரதானமானவை நாம் உபயோகிக்கும் எண்ணெய். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்திடும் வகையிலும் சுவை தரக்கூடியதாகவும் இந்த எண்ணெய் இருந்திடவேண்டும். அதற்காக பார்த்து பார்த்து செய்யப்பட்டதுதான் கார்டியா அட்வான்ஸ் நல்லெண்ணெய்.
கோல்ட் பிரெஸ்ஸிங் என்னும் முறையில் காளீஸ்வரி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த நல்லெண்ணையில் ஒமேகா 6, ஒமேகா 9 ஃபேட்டி ஆசிட்கள் கணிசமான அளவு அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லாமல், நம்முடைய உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் லிக்னான்கள், டோகோபெரோல்கள் ஆகியவையும் இந்த நல்லெண்ணையில் இருக்கின்றன. மேலும், இதில் இயற்கையாக அமைந்து உள்ள Natural Oxidants உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது.
கிராமங்களில் பிரசித்திபெற்ற வத்தல் குழம்பு மற்றும் எண்ணெய் கத்திரிக்கா குழம்பு ஆகியவற்றை இந்த கார்டியா நல்லெண்ணயில் சமைக்கும்போது, நாட்டு சமையலின் ருசியையும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் நாம் ஒருங்கே பெற முடிகிறது. கிராமங்களில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களுடன் சேர்ந்த குழம்புகளுக்கு இந்த நல்லெண்ணெய் கூடுதல் சுவையை அளிக்கின்றன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)