Reliable Software
www.garudabazaar.com

"அப்பாடா!!".. 'சிம்பு' ரசிகர்களுக்கு தயாராகும் ட்ரீட்!.. மாஸ் அப்டேட் தந்த 'மாநாடு' பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு ரிலீஸ் திட்டமிடும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

Yuvan tweets simbu venkat prabhu maanaadu single update

இந்த படத்தில் எஸ்.டி.ஆருடன், கல்யாணி பிரியதர்ஷின், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  எனவே எஸ்.டி.ஆர் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியிலான இந்த மாநாடு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று சிம்பு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இந்நேரத்தில், இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக ரம்ஜான் திருநாளில் வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர், இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாரும் கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலையின் திடீர் மறைவு காரணமாக இந்த திட்டம் மாற்றப்பட்டது.

பின்னர் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், “ஒவ்வொரு நாளும் பேரழிவு காலங்களில், ஏதோ இழப்பு பற்றிய செய்தி காதுகளில் விழுகிறது. கொண்டாட்ட மனநிலையில் யாரும் இல்லை. மக்கள் இந்த நோயை எதிர்த்துப் போராடும் இந்த சூழ்நிலையில் மாநாடு படத்தின் முதல் தனிப்பாடலை வெளியிடுவது இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்றதாக இருக்கும்.

எனவே லாக்டவுன் முடிவுக்கு வரட்டும், அல்லது குறைந்தபட்சம் நிலைமை இயல்பு நிலைக்காவது வரட்டும். அதுவரை, அனைவருக்குமாக பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ” என குறிப்பிட்டிருந்தார்.

இப்போது, ​​இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது சமூக ஊடகங்களில் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “ஏய் மாநாடு படத்தின் முதல் single மிக விரைவில் வருகிறது!! பாதுகாப்பாக இருங்கள். அன்பை பகிருங்கள்!” என  ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ: "நயன்தாரா இல்ல.. ஐயா படம் நான் நடிச்சுருக்க வேண்டியது!" - ரிவீல் செய்த பிரபல ஹீரோயின்! Exclusive பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan tweets simbu venkat prabhu maanaadu single update

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.