www.garudabazaar.com

ஒரு தடவ 'குறும்படம்' போட்டாங்க... அதுக்காக அப்படி சொல்லாதீங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆரியும், பாலாஜியும் போட்ட பிளானை பிக்பாஸ் ஒட்டுக்கேட்டு விட்டார் போல. இன்று அதை வைத்தே ஒரு டாஸ்க் கொடுத்து அன்பு அணியை பந்தாடி விட்டார். ஏற்கனவே அந்த அணியை சேர்ந்த நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றனர். யார் வெளியேறினாலும் ஆட்டம் மாறிவிடும். இந்த நிலையில் ரோபோட் டாஸ்க் கொடுத்து தன்னுடைய மதியூகத்தை பிக்பாஸ் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

'You will Never Accepted' Archana stated to Balaji

அனிதா, ஆரி, ரியோ, நிஷா என பாலாஜி வலுவான போட்டியாளர்களை எடுத்துக்கொள்ள அர்ச்சனா தன்னுடைய அணிக்கு கேப்ரியலா, ரம்யா, ஷிவானி, சோம், ரமேஷ் ஆகியோரை தேர்வு செய்தார். ரம்யா, ரமேஷ் இருவர் மட்டுமே இந்த போட்டியில் தாக்குப்பிடித்து வருகின்றனர். இதனால் நாளை என்ன நடக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று டாஸ்க்கின் போது அர்ச்சனாவின் ஹார்ட்டுகள் இரண்டையும் பாலாஜி அணியினர் கைப்பற்றி விட்டனர். இதனால் அர்ச்சனா-பாலாஜி இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. ஆனால் பிக்பாஸ் சொல்லாமல் அதை திருப்பித்தர முடியாது என பாலாஜி சொல்லி விட்டார். இதைக்கேட்ட அர்ச்சனா நீ ஒத்துக்க மாட்ட என கூற, பதிலுக்கு பாலாஜி ஒரு தடவ குறும்படம் போட்டாங்க. அதுக்காக தப்புன்னா நான் ஒத்துக்க மாட்டேன் சொல்லாதீங்க என கோபத்துடன் பதிலளித்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இப்போ தான் ஆட்டம் சூடு பிடிக்குது. அப்படியே அந்த அன்பு கேங்கை ஒடைச்சு விடுங்க பிக்பாஸ் என, கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'You will Never Accepted' Archana stated to Balaji

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.