'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் வருகிற 2020 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடியன் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். மும்பையில் நடக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுல பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.