FUN guaranteed..! - சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இவருமா? வேற லெவல் Treatment இருக்கும் போல..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 04, 2019 06:25 PM
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல், இவானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இதனையடுத்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்த புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ‘டாக்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் நடிக்கவிருப்பதாக அறவிப்பு இன்று காலை வெளியானது இந்நிலையில் தற்போது பிரபலகாமெடி நடிகர் யோகிபாபு இணைந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Marupadiyum @iYogiBabu joins hands with @Nelson_director🤩 Kekkavae vendam, FUN guaranteed!!🤣 Welcome on board #DOCTOR 🤝@Siva_Kartikeyan @anirudhofficial @SKProdOffl @KalaiArasu_ @EzhumalaiyanT @DoneChannel1 @proyuvraaj @gobeatroute pic.twitter.com/xw0X3D1xWi
— KJR Studios (@kjr_studios) December 4, 2019