www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் இருந்து விலகிய பிரபல வசனகர்த்தா... காரணம் இது தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ், தனது 43 வது படமாக தற்போது "மாறன்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

writer vivek out from maaran movie due to this reason

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாஃபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.இந்த படத்திற்காக மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் திரைக்கதைக்காக பணிபுரிகின்றனர்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

writer vivek out from maaran movie due to this reason

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம்  பிரத்யேகமாக வெளியாகிறது.திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், சிங்கிள் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் மாறன் படத்தின் வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பணியில் இருந்து பிரபல பாடலாசிரியர் விவேக் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக நான் மாறன் படத்தின் வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பணியில் இருந்து விலகுகிறேன்.

writer vivek out from maaran movie due to this reason

எனது முடிவை மதித்த மாறன் படக் குழுவிற்கு நன்றி. இன்று நான் வசனம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் (ஷங்கர் - ராம்சரண் படம்) ஒரு பகுதியாக இருக்கிறேன். இதற்கு மாறன் தான் தொடக்கப் புள்ளி என்பதை எப்போதும் நினைவில் கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Maaran, Dhanush

தொடர்புடைய இணைப்புகள்

writer vivek out from maaran movie due to this reason

People looking for online information on Dhanush, Maaran will find this news story useful.