Hyderabad House News Banner USA
Game Over Others Banner USA
Fakir Other Banner USA

‘அது அது அந்தந்த வயசுல நடந்தா தான் நல்லா இருக்கும்..’- நாகார்ஜுனாவின் ‘மன்மதுடு 2’ டீசர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்மதுடு 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நாகார்ஜுனா-சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மன்மதுடு’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.

Watch: Nagarjuna's Manmadhudu 2 teaser is out now

மாஸ்கோவின் காவேரி’, ‘வணக்கம் சென்னை’, ‘யூ-டர்ன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், வெண்ணிலா கிஷோர், லக்ஷ்மி, ராவ் ரமேஷ், ஜான்ஸி, தேவதர்ஷினி, நிஷாந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் நாகார்ஜுனாவின் மருமகள் நடிகை சமந்தாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நாகார்ஜுனாவின் காதல் அட்ராசிட்டியை மையமாகக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார் ராகுல் ரவீந்திரன்.

நாகார்ஜுனாவின் மனம் எண்டர்பிரைசஸ், அண்ணப்பூர்னா ஸ்டூடியோஸ், வயகாம் 18 ஸ்டூடியோஸ், ஆனந்தி ஆர்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மன்மதுடு 2’ திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அது அது அந்தந்த வயசுல நடந்தா தான் நல்லா இருக்கும்..’- நாகார்ஜுனாவின் ‘மன்மதுடு 2’ டீசர் வீடியோ