திரைப்படமாகும் விங் கமாண்டர் அபிநந்தனின் கதை..! விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 25, 2019 01:35 PM
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் கதை, விரைவில் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அப்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான எப்-16 ரக போர் விமானத்தை, சுட்டு வீழ்த்தியவர் அபிநந்தன். அமெரிக்கத் தயாரிப்பான அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திய, உலகின் ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர், சென்னையை சேர்ந்த மாவீரன் அபிநந்தன்.
எதிர்பாராதவிதமாக விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்ட நிலையிலும், அவர் விட்டுக் கொடுக்காத வீரமும், சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது.
இதனிடையே, அபிந்தன் கார்ட்டூன்கள், அபிநந்தன் மீசை என, நாடு முழுவதும் அவர் ஒரு ஹீரோவாக கொண்டாடப்பட்ட நிலையில், அபிநந்தனின் கதையை திரைப்படமாக எடுக்கவிருக்கிறார் நடிகர் விவேக் ஓபராய். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கப்பட உள்ள இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயும் நடிக்க உள்ளார்.
அபிநந்தன் கதையை படமாக்குவதற்கான அனுமதியை, முறையாக பெற்றுள்ளார் விவேக் ஓபராய். விரைவில், இத்திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. நரேந்திர மோடி திரைப்படத்தில், மோடி கதாபாத்திரத்தில் நடித்தவர், விவேக் ஓபராய் என்பது குறிப்பிடத்தக்கது.