விஷ்ணு விஷாலுக்காக, அவரது மகன் மக்களிடம் Request !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷால் தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பங்கள், அதிலிருந்து மீண்டு வந்த விதம் உள்ளிட்டவை பற்றி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். உடல் வலிமை மன வலிமையை அளிக்கும் என்று உடற்பயிற்சியின் அவசியத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Vishnu Vishal Son request to fans about Gautham Vasudev Menon's FIR movie Teaser

இந்நிலையில் இவர் சமீபத்தில் தயாரித்து நடித்திருந்த 'எஃப்ஐஆர்' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது டீஸர் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதில் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் எனது அப்பாவின் புதுப்பட டீஸரை பாருங்கள் என்று அவரது மகன் ரசிகர்களுக்கு Request கொடுக்கும் விதமாக அதில் எழுதப்பட்டுள்ளது.

எஃப்ஐர் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌரவ் நாராயணன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். அஸ்வத் இந்த படத்துக்கு இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Entertainment sub editor