www.garudabazaar.com

''மீறி அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டால்...'' - விஷால் தரப்பில் இருந்து விடப்பட்ட எச்சரிக்கை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பாக விஷால் தயாரித்து நடித்த 'சக்ரா' படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vishal film factory issues statement about regarding Accountant Ramya | கணக்காளர் ரம்யா குறித்து விஷால் தரப்பு எச்சரிக்கை

இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் 6 வருடங்களாக கணக்காளராக பணிபுரிந்த பெண் ஒருவர் அவரிடம் இருந்து பணத்தை கையாடல் செய்துள்ளாதாக நிறுவன மேலாளர் ஹரி வடபழனி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''இனி ரம்யா எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Vishal film factory issues statement about regarding Accountant Ramya | கணக்காளர் ரம்யா குறித்து விஷால் தரப்பு எச்சரிக்கை

People looking for online information on Vishal, Vishal Film Factory will find this news story useful.