www.garudabazaar.com

விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் #Chiyaan61 படத்தின் மாஸ் அறிவிப்பு.. தரமான சம்பவம் இருக்கு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரமின் அநாயச நடிப்புக்கு பல தமிழ்த் திரைப்படங்கள் உதாரணங்களாக விளங்குகின்றன.

vikram Chiyaan61 pa ranjith direction in studiom green official

முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் சாமி 2-ஆம் பாகம் படத்தைத் தொடர்ந்து கடாரம் கொண்டான் திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. இதேபோல், இயக்குநரும், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளருமான இயக்குநர் பா.ரஞ்சித் கடைசியாக ஆர்யா நடிப்பிலான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆர்யாவுடன் பசுபதி, கலையரசன், காளி வெங்கட், ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விக்ரமுடன் இணைய வாய்ப்புள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த தகவலை உண்மையாக்கும் வகையிலான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் இதர படக்குழு விபரத்தை விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு என்றும், விக்ரமின் 61வது திரைப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அஜய் ஞானமுத்துவின் இயக்கத்திலான கோப்ரா திரைப்படம் உட்பட சில திரைப்படங்கள் நடிகர் விக்ரமின் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், பா.ரஞ்சித்தின் இயக்கத்திலான நட்சத்திரம் நகருகிறது திரைப்படத்தின் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vikram Chiyaan61 pa ranjith direction in studiom green official

People looking for online information on Chiyaan61, K. E. Gnanavelraja, Pa Ranjith, Trending, Vikram will find this news story useful.