Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'Chiyaan 61'.. "சும்மா மாஸான தகவலா இருக்கே இது"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள திரைப்படம் தொடர்பாக அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது.

vikram and pa ranjith next chiyaan 61 shooting update sources

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விக்ரமின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக தமிழ் சினிமா திரை வடிவில் காண ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், நேற்று (30.09.2022) வெளியாகி இருந்தது.

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி, அனைத்து மக்களிடம் இருந்தும் சிறப்பான பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல திரைப்படங்களால் மக்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடைசியாக "நட்சத்திரம் நகர்கிறது" என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை பா. ரஞ்சித் இயக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை "சியான் 61" என குறிப்பிட்டு வரும் நிலையில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

சியான் 61 படத்தின் பூஜையும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றிருந்தது. இதில், இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளதாகவும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பது பற்றி நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 10 ஆம் தேதி, பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் சியான் 61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய இணைப்புகள்

vikram and pa ranjith next chiyaan 61 shooting update sources

People looking for online information on Chiyaan 61, K. E. Gnanavel Raja, Pa Ranjith, Vikram will find this news story useful.