வெறித்தனம் – 'பிகில்' தேசிய அளவில் புதிய சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

Vijay's Bigil directed by Atlee achieves national level record.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் கதிர், விவேக், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா என்று ஏராளமானோர் நடித்திருந்தனர்.

முதல் முதலாக வெளியிடப்பட்ட இந்த படத்தின்  ‘சிங்கப்பெண்ணே’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த சமையத்தில் விஜய் ரசிகர்கள் பிகில் ஹேஷ்டேகை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இன்று டிவிட்டர் இந்தியா தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்திய அளவில் அதிகபடியாக ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேகுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் பிகில் ஹேஷ் டேக் தேசிய அளவில் 6வது இடத்தை பெற்றுள்ளது.

2019 லோக்சாபா எலக்‌ஷன், சந்திராயன் 2 ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் முதன்மை  இடங்களை தக்கவைத்துள்ள நிலையில் தமிழ் திரைப்படம் சார்ந்த ஒரு ஹேஷ்டேக் தேசிய அளவில் 6வது இடத்தை பிடித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் டிவிட்டர் இந்தியாவின் ’டாப் 10 கேளிக்கை பிரபலங்கள்’ பட்டியலிலும் விஜய் 5வது இட த்தை பிடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் 6வது இடத்தையும், இயக்குநர் அட்லி 10வது இடத்தையும் பிடித்துள்ளார். ஒரே தமிழ் படத்தில் பணியாற்றிய 3 பிரபலங்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.