சிறுவயதில் பாண்டியன் ஸ்டோர் நாயகி.... பின்னாடி ஒரு மிரட்டலான வில்லன் கவனீச்சீங்களா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான டாஸ்க்குகள் டிரெண்டாகி வருகிறது. இதில் பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில் பிரபலங்கள் தங்களது சிறுவயது ஃபோட்டோவை பகிர்ந்து வருகின்றனர். அவை தற்போது வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகை சுஜிதா சிறுவயதில் தனது அம்மா தங்கையுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் திரைப்படம் சிரஞ்சீவியின் 'பசுவடுபிரணம்''.  என் பின்னால் பயமுறுத்தக்கூடிய வில்லன் பாபு ஆண்டனி இருக்கிறார். என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சுஜிதா தமிழில்' பூவிழி வாசலிலே' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Entertainment sub editor