www.garudabazaar.com

Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

Vijay to watch Varisu Final Copy before release deets

Also Read | 'துணிவு' படம் பார்த்த ஷாலினி அஜித்குமார்‌?.. ஷோ முடிந்ததும் போனி கபூர் போட்ட வைரல் பதிவு!

வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay to watch Varisu Final Copy before release deets

சமீபத்தில்  வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Vijay to watch Varisu Final Copy before release deets

இந்த நிலையில், வாரிசு படத்தின் Final Copy-ஐ ரிலீஸ்க்கு முன்னர் விஜய் பார்க்கவுள்ளதாகவும் அதன்படி இன்று மாலை ஒரு தனி திரையரங்கில் நடிகர் தளபதி விஜய் வாரிசு படத்தை பார்க்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Also Read | "வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இது தானா?".. வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay to watch Varisu Final Copy before release deets

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Pongal, Vijay will find this news story useful.