தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'மஹார்ஷி'. இந்த படத்தை வம்சி இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், வைஜெயந்தி மூவிஸ் , பிவிபி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தில் மகேஷ் பாபவுடன் அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாகவும், தளபதி விஜய் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. விஜய் ஏற்கனவே மகேஷ் பாபுவின் 'ஒக்கடு' படத்தின் ரீமேக்கான 'கில்லி'யிலும், 'போக்கிரி' படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.