’விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும்’ – 'மாமனிதன்' படம் பற்றி ஒளிப்பதிவாளர் சுகுமார்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 18, 2019 01:59 PM
’தென்மேற்கு பருவக்காற்று’, ’தர்மதுரை’ படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணைந்துள்ள படம் ’மாமனிதன்’. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளனர். ஜோக்கர் குரு சோம சுந்தரம் , காயத்ரி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. ‘மைனா’, ’கும்கி’, ’தடையறத் தாக்க’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘மாமனிதன்’ பற்றி அவர் தெரிவித்தபோது, ’தர்மதுரையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இது இருக்கும். மற்றவர்களை பார்த்து வாழாமல், நமக்காக நாம் வாழ்வோம் என்ற செய்தியை கூறும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதையாக இப்படம் இருக்கும்’ என தெரிவித்தார்.
இப்படத்தில் முக்கியமான 4 காட்சிகளை ஒரே ஷாட்டில் படம்பிடித்ததாக சுகுமார் குறிப்பிட்டார். மேலும் விஜய் சேதுபதி, காயர்தியின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என கூறினார்.