www.garudabazaar.com

விஜய் சேதுபதியின் வேற லெவல் லுக்!!.. அறிமுகமான செஃப்கள்! மாஸ்டர் செஃப் Promo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு ப்ராஜக்ட்களில் படு பிஸியாக இருக்கிறார்.

vijay sethupathi master chef introduces judges chefs new promo

சினிமாவைத் தவிர, சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள சர்வதேச அளவில் பிரபலமான சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தமிழை தொகுத்து வழங்கவும் உள்ளார். அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு தான், இந்த நிகழ்ச்சியின் முதல் விளம்பரத்தை சன்.டிவி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும், பார்வையாளர்களிடையே அதிகரித்ததை அடுத்து, அடுத்தடுத்த ப்ரோமோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. தெலுங்கில் நடிகை தமன்னா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், இந்த நிகழ்ச்சிக்கான செஃப்களுடன் விஜய் சேதுபதி தோன்றுகிறார். அதில் செஃப்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக இறுதியில் விஜய் சேதுபதி குறிப்பிடுகிறார். 

திரைப் படங்களைப் பொறுத்தவரை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இப்படத்தின் செம்ம மாஸான ஃபர்ஸ்ட் லுக் மிக அண்மையில் வெளியானது. அனிருத் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

இது தவிர, அவர் 'நவரசா', 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'மாமனிதன்', 'லாபம்' மற்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற படங்களும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.

ALSO READ: நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்!! Rolls Royce Car விவகாரத்தில் நடந்தது என்ன?

விஜய் சேதுபதியின் வேற லெவல் லுக்!!.. அறிமுகமான செஃப்கள்! மாஸ்டர் செஃப் PROMO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi master chef introduces judges chefs new promo

People looking for online information on MasterChef, MasterChefTamil, SunTV, Tamannaah, Trending, Vijay Sethupathi will find this news story useful.