BREAKING: ‘6 Days...’ விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பற்றி முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64 படத்தில் விஜையுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என்று ஏராளமானோர் நடித்து வருகின்றனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vijay Sethupathi important update from Thalapathy 64

ஆரம்பத்தில் டெல்லியில் நடைபெற்றுவந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஷூட் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் தொடங்கியது. கடந்த 24ம் தேதி இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி நேற்று (29.12.2019) தன்னுடைய பகுதியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். வெறும் 6 நாட்களுக்குள் இந்த காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளன.

விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

Entertainment sub editor